இன்று (செப்டம்பர் 1ஆம் தேதி) காலை தானா மேராவிலிருந்து தெற்கே சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு டேங்கரும் மால்டாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு மொத்த கேரியரும் மோதிக்கொண்டன. மேலும் டேங்கரிலிருந்து சிறிது எரிபொருள் கசிவு ஏற்பட்டது.
இந்த மோதலின் விளைவாக எரிபொருள் கசிந்ததால் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை மக்களுக்கு வெளியிட்டுள்ளது.
மறு அறிவிப்பு வெளியிடும் வரை கிழக்கு கடற்கரை பூங்கா கடற்கரைகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் மாலையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளது.