சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஆன்லைன் குற்றவியல் தீங்குகள் சட்டத்தின் கீழ் முதல்முறையாக பேஸ்புக்கில் அரசாங்க அதிகாரி ஆள்மாறாட்டம் மோசடிகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என உள்துறை இணை அமைச்சர் கோ மெய் மிங் இன்று (புதன்கிழமை) செப்டம்பர் 3ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மூலம் மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு சர்வதேச லாப நோக்கமற்ற அமைப்பான குளோபல் ஆன்டி ஸ்கேம் அலையன்ஸ் சிங்கப்பூரில் நடத்திய ஆன்டி ஸ்கேம் உச்சி மாநாடு 2025 இல் 2-வது நாளில் இந்த அறிவிப்பை உள்துறை இணை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
முக்கியமாக பேஸ்புக்கில் அரசு அதிகாரிகளை போல ஆள்மாராட்டம் செய்யும் மோசடி விளம்பரங்கள், கணக்குகள், சுய விவரங்கள் மற்றும் வணிக பக்கங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மெட்ராஸ் செயல்படுத்த வேண்டும் என அறிவித்தார்.
இதுபோன்ற ஆழ் மாறாட்ட மோசடிகளுக்கு மோசடி செய்பவர்கள் பயன்படுத்த முதன்மையான தளமாக facebook உள்ளது.
இந்த மோசடிகளை தடுக்க இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் திரு கோ கூறினார்.
இதுபோன்ற மோசடியின் மூலம் ஏற்பட்ட இழப்புகளானது 90 விழுக்காடு அதிகரித்து, சுமார் $126 மில்லியன் ஆக உயர்ந்துள்ளன. சராசரியாக ஒவ்வொரு GOIS மோசடியும் சுமார் $72,000 இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடக தளம் பிப்ரவரி 28 2026க்குள் ஆன்லைன் தொடர்பு சேவைகள் நடைமுறை விதிகளுக்கு இணங்க வேண்டும்.
மோசடிகளை முன்கூட்டியே அறிவுறுத்த Tiktok பொருத்தமான அமைப்புகள் செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டி இருக்கும்.