சிங்கப்பூரில் விமானங்கள் ரத்து..!!! ஏன்..?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!!

சிங்கப்பூரில் விமானங்கள் ரத்து..!!! ஏன்..?? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!!

ரகாசா சூறாவளி எதிரொலியாக ஹாங்காங் விமான நிலையம் 36 மணி நேரம் மூடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சூறாவளியை சமாளிக்க தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் நாடுகள் தயாராகி வருகின்றன.

ஹாங்காங்கை சக்திவாய்ந்த சூறாவளி நெருங்கி வருகிறது. இந்த சூறாவளிக்கு “ரகாசா” என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பிலிப்பைன்ஸ் லுசோன் தீவில் இருந்து வடகிழக்கே 160 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. தென் சீனக்கடலில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், மேற்கு திசையில் ஹாங்காங்கை நோக்கி நகர்ந்து சீனாவின் தெற்கு கடற்கரைக்கு நகரும் என்று தெரிகிறது.

அதிகபட்சமாக மணிக்கு 202 முதல் 221 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மணிக்கு 20 கிமீ வேகத்தில் மேற்கு, வட மேற்காக நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

ரகாசா சூறாவளியானது கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளதை அடுத்து, ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர், விமான நிலையத்தை தற்காலிகமாக மூடி விடலாம் என்று விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இன்று(23/09/2025) மாலை 6 மணி முதல் (25/09/2025) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிக்கை  வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள். ரகாசா புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

ரகாசா சூறாவளி எதிரொலியாக, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பிலிப்பைன்ஸ், மணிலாவில் அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு நேற்று(22/09/2025) விடுமுறை விடப்பட்டது.. பிலிப்பைன்சின் படேன்ஸ், பாபுயன் தீவுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஹாங்காங்கில் உருவாகியுள்ள ரகாசா புயலானது நாளை (24/09/2025) கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 230 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து ஹாங்காங் செல்லவிருந்த 8 Scoot விமானங்கள் மற்றும் 12 சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

WHATSAPP CHANNEL LINK

 

 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan