சிங்கப்பூரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது..!! காரணம் என்ன??

சிங்கப்பூரில் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது..!! காரணம் என்ன??

39 வயதான தட்சிணாமூர்த்தி காத்தையா என்பவர் மலேசியாவில் உள்ள தமிழர் 44.96 கிராம் diamorphine என்ற போதைப் பருளான அபின் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 

 

தட்சிணாமூர்த்திக்கு 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். ஆனால் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிராகரிக்கப்பட்டது.திபருக்கு கருணை மனுக்கள் அனுப்பியும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சிங்கப்பூரின் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் 15 கிராமுக்கு அதிகமான போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற சட்டம் அமலில் உள்ளது. 

மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவதாக மத்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.

தனை அடுத்து போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி காத்தையா என்பவருக்கு நேற்று (25/09/2025) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 இந்த விவரங்களை மத்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

போதைப்பொருள் கடத்தல் பயன்படுத்துபவருக்கு மட்டுமல்லாது அவரது குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என மத்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவு கூறியுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK