சிங்கப்பூர்: தெம்பனிஸில் நேற்று (29.09.25) காலை 11:05 மணிக்கு தெம்பனிஸ் சென்ட்ரல் 8 மற்றும் தெம்பனிஸ் மால் சந்திப்பில் ஒரு SBS டபுள் டெக்கர் பேருந்து சறுக்கி விழுந்தது.
இதில் எட்டு பயணிகள் காயமடைந்து சாங்கி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் 19 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட போது அனைவரும் சுயநினைவுடன் இருந்தனர்.
44 வயதான பேருந்து ஓட்டுநர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் SBS டிரான்சிட் டபுள் டெக்கர் பேருந்தின் முன்புறம் மற்றும் தடுப்பு பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தை காட்டுகின்றன.
SMRT செய்தித் தொடர்பாளர் சென் குய்சென் கூறியதாவது, காயமடைந்தவர்களை தொடர்பு கொண்டு தேவையான ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.