சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி ரெய்டு..!! சிக்கியவர்கள் எத்தனை பேர்..??

சிங்கப்பூர் காவல்துறையின் அதிரடி ரெய்டு..!! சிக்கியவர்கள் எத்தனை பேர்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடியை முறியடிக்க காவல்துறை இரண்டு வார அமலாக்க நடவடிக்கையை தொடங்கியது.

இந்த நடவடிக்கையின் போது பிடிபட்ட 208 ஆண்களும் பெண்களும் தற்போது விசாரணைக்கு உதவி வருகின்றனர்.ஏழு உள்ளூர் காவல் நிலையங்களைச் சேர்ந்த வணிக விவகாரத் துறை மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் கடந்த மாதம் 26 ஆம் தேதி தீவு முழுவதும் இரண்டு வார அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கினர். 15 முதல் 77 வயதுக்குட்பட்ட மொத்தம் 140 ஆண்களும் 68 பெண்களும் விசாரணையில் உதவி வருகின்றனர்.

இவர்கள் 50க்கும் மேற்பட்ட பல்வேறு மோசடி சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் சுமார் S$5.2 மில்லியனுக்கு மேல் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

பொதுமக்கள் இது போன்ற மோசடிச் சம்பவங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும், தேவைப்பட்டால் காவல்துறையை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK