சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை பதிவு..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமூக ஊடக நேரடி ஒளிபரப்புகளில் “அதிர்ஷ்டக் குலுக்கல்” மற்றும் மின் வணிக மோசடிகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.ஆகஸ்ட் மாதத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட மோசடி புகார்களை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது சுமார் S$160,000 வரை இழந்துள்ளனர்.
அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடிகளில் மோசடி செய்பவர்கள் பேஸ்புக் நேரடி ஒளிபரப்புகளின் போது ரொக்கப் பரிசுகளை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி ஸ்கிராட்ச்-ஆஃப் லாட்டரி அட்டைகளை விளம்பரப்படுத்துகின்றனர். அட்டைகளை வாங்கிய பிறகு, அவர்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க அல்லது பரிசை பெருக்க பணம் அனுப்பச் சொல்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில், தாமதமாக பணம் செலுத்துவதாக கூறி, பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து பங்கேற்கச் செய்யும் முறையும் இடம்பெறுகிறது.
மின் வணிக மோசடியில், மோசடி செய்பவர்கள் Facebook Live மூலம் “தங்கப் பைகளை” விற்பனை செய்து, பரிசு வெல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகின்றனர். பரிசு வெல்லாதவர்கள் அதிக பைகளை வாங்கவோ, வாய்ப்புகளை அதிகரிக்க மேம்படுத்தவோ வற்புறுத்தப்படுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் போனஸ் அல்லது லாபம் கிடைக்காதபோது தான் மோசடியில் சிக்கி இருப்பதை உணர்வதாக காவல்துறை எச்சரித்துள்ளது.