குயின்ஸ்டவுனில் நடந்த சோகச் சம்பவம்..!!!

குயின்ஸ்டவுனில் நடந்த சோகச் சம்பவம்..!!!

சிங்கப்பூர்: குயின்ஸ்டவுனில் உள்ள ஒரு HDB குடியிருப்பில் 52 வயது நபர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த துயரச்சம்பவம் நேற்று (20.10.25) இரவு சுமார் 7.40 மணிக்கு ஸ்டிர்லிங் சாலையில் உள்ள பிளாக் 181-ல் நிகழ்ந்தது.

போலீசார் தெரிவித்ததாவது, 52 வயது ஆண் ஒருவர் தரை தளத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சிவில் பாதுகாப்புப் படை (SCDF) அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று அவரை பரிசோதித்தபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை தொடர்கிறது.

பொது மக்களுக்கு ஏதேனும் மனநல உதவி தேவைப்பட்டால் சிங்கப்பூர் மீட்பு சங்கம் 24 மணி நேர ஹாட்லைன்-1767 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும்,24 மணி நேர SMS சேவை-9151 1767 போன்றவற்றை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK