சன்டெக் சிட்டியில் கடைஊழியரை கதிகலங்க வைத்த 34 வயது நபர்..!!! என்ன நடந்தது..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி செய்வதற்காக வங்கி பரிமாற்ற ஸ்கிரீன் ஷாட்களை போலியாக தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் மீது இன்று (03.11.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.
சன்டெக் சிட்டியில் மின்னணு பொருட்களுக்கு பணம் செலுத்தியதாகக் கூறி, போலி PayNow ஸ்கிரீன்ஷாட் காட்டி விற்பனையாளரை ஏமாற்றியதாக 34 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
காவல்துறை தெரிவித்ததாவது, சம்பவம் நடந்த அதே நாளில் தகவல் கிடைத்த மூன்று மணி நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஆரம்ப விசாரணையில், அவர் இதே போன்ற ஐந்து வழக்குகளிலும் தொடர்புடையவர் என நம்பப்படுகிறது.
மோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பொதுமக்கள் PayNow பரிமாற்றங்களைச் செய்யும்போது விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் வணிகர்கள் பொருட்களை வழங்குவதற்கு அல்லது சேவைகளை வழங்குவதற்கு முன்பு நிதி பெறப்பட்டதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறியது.