சிங்கப்பூரில் இந்த ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தல் நடந்து முடிந்தது.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப தேர்தல் துறையானது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு சீட்டுகள் மற்றும் ஆவணங்களை முத்திரை இட்டு கடந்த ஆறு மாத காலம் உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த ஆவணங்களையும் வாக்குச்சீட்டுகளையும் அழிக்கும் செயல்முறைகளை பார்வையிடுவதற்காக வேட்பாளர்களுக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
முத்திரையீட்டு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை துவாஸ் சவுத் ஏரியாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர்களுடைய முன்னிலையில் நேற்று(22/11/2025) அழிக்கப்பட்டன.