யீஷூன் காப்பி கடையில் திடீரென சரிந்து விழுந்த நபரால் பரபரப்பு..!!
சிங்கப்பூர்: யீஷூன் ரிங் ரோட்டில் அமைந்துள்ள பிளாக் 848ல் நேற்று (06.12.25) காலை நடந்த சம்பவம் அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
காப்பி கடையில் உணவு வாங்க வரிசையில் நின்றிருந்த ஒரு ஆடவர் திடீரென மயங்கி விழுந்தார்.
சம்பவம் குறித்து கடை ஊழியர் கூறியதாவது, அவர் எதுவும் சொல்லாமல் முன்புறம் சாய்ந்து திடீரென தரையில் விழுந்தார். உடனே சிலர் அவரை எழுப்ப முயற்சி செய்ததாக கூறினார்.
அந்த நேரத்தில் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் ஆடவருக்கு உதவ ஓடினர். மேலும் கடை ஊழியருக்கு ஓரளவு முதலுதவி தெரிந்திருந்ததால் அவருக்கு உதவ முடிந்ததாக தெரிவித்தார்.
மேலும் சில நிமிடங்களில் ஆடவரின் குடும்பத்தினரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தது.