RMB சந்தையில் DBS எண்ட்ரி..!!இனி முதலீடு, வர்த்தகம் எளிதாகுமா..?
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS குழுமம், சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் நாட்டின் இரண்டாவது RMB தீர்வு வங்கியாக நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், RMB தீர்வு வங்கியாக நியமிக்கப்பட்ட முதல் உள்ளூர் வங்கியாக DBS மாறியுள்ளது. இதற்கு முன்பு சீன தொழில்துறை மற்றும் வணிக வங்கியின் (ICBC) சிங்கப்பூர் கிளை இந்த பொறுப்பை வகித்து வந்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,DBS ஐ RMB தீர்வு வங்கியாக நியமித்தது சிங்கப்பூரின் கடல்கடந்த RMB சந்தையின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என்றும்,பிராந்திய தேவைகளை பூர்த்தி செய்ய வர்த்தகம், முதலீடு மற்றும் பிற பொருளாதார நடவடிக்கைகளில் RMB பயன்பாட்டை விரிவுபடுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நியமனம் சிங்கப்பூர் மற்றும் சீனா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழு (JCBC) கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.
இதனுடன், நேரடிப் பத்திரச் சந்தை ஏற்பாடுகளைத் தொடங்குதல், முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் சீனாவுக்குச் செல்லும் சிங்கப்பூர் பயணிகள் சீனாவில் செலவழிப்பதற்காக தங்களின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை RMB மூலம் நிரப்ப அனுமதிப்பது போன்ற பல ஒப்பந்தங்களும் இடம்பெற்றுள்ளன.