சிங்கப்பூர் டூ மன்னார்குடி கடத்தல்: 5 பேர் கைது..!!

சிங்கப்பூர் டூ மன்னார்குடி கடத்தல்: 5 பேர் கைது..!!

சிங்கப்பூரில் இருந்து மன்னார்குடிக்கு அம்பர் கிரீஸ் என்ற மிதக்கும் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.

ஏறக்குறைய 2.5 கிலோ எடை கொண்டது. இந்திய ரூபாய் மதிப்பில் 2.50 கோடி மதிப்புடையதாகும்.

கடத்திவரப்பட்ட இந்த மிதக்கும் தங்கத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதிய பேருந்து நிலையம் அருகே விற்க முயன்ற போது வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்குச் சென்று அம்பர் கிரீஸை பறிமுதல் செய்து, ஐந்து நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வடுவூர், எளவனூர் மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களை சேர்ந்த 39 வயது முதல் 64 வயதிற்கு உட்பட்ட ஐந்து பேர் இந்த கடத்தல் சம்பவத்தில் சிக்கியுள்ளனர்.

இதனை அடுத்த மாவட்டத்தின் வனப்பொறுப்பு அலுவலரான கிருத்திகா அவர்களின் உத்தரவை அடுத்து இந்த அதிரடி கைது நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது.

இந்த அப்பர் கிரீஸ் எப்படி இவர்களிடம் கிடைத்தது என்பது குறித்த விசாரணை தற்போது நடந்து கொண்டு வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK