சிங்கப்பூரில் மறு விற்பனை வீட்டின் விலை குறைய வாய்ப்பு..!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் சுமார் 13,480 வீடுகள் 2026ல் குறைந்தபட்ச குடியிருப்பு காலம் (MOP) நிறைவு பெறவுள்ளது.
அதில் பெரும்பாலானவை பொங்கோல், குவீன்ஸ்டவுன், தெம்பனிஸ் பகுதிகளில் உள்ளன. 2025ல் MOP-ஐ எட்டிய 6,970 வீடுகளுடன் ஒப்பிடும் போது 2026 இல் அதன் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.
பொங்கோலில் 3,222, குவீன்ஸ்டவுன்-டாசனில் 2,405, தெம்பனிஸில் 2,133 வீடுகள் MOP-ஐ எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
தோ பாயோவின் பிடாடாரி பகுதியில் 1,594 வீடுகள் MOP நிலை அடையும். டாசன் மற்றும் பிடாடாரி பகுதிகளில் மறுவிற்பனை வீடுகள் மில்லியன் டாலர் விலையில் விற்கப்படுகின்றன.
2026ல் MOP-ஐ எட்டும் வீடுகளில் 5,909 நான்கறை வீடுகள், 2,711 ஐந்தறை வீடுகள், 2,561 மூவறை வீடுகள், 2,299 ஈரறை வீடுகள் உள்ளன.
புதிய BTO வீடுகளும் மீதமுள்ள விற்பனையும் சந்தை தேவையை பூர்த்தி செய்யும். ஜூனில் டாசனில் உள்ள ‘ஸ்கை டெர்ரஸ்’ வீடு 1,313 சதுர அடி, 1.659 மில்லியன் SGD-க்கு விற்கப்பட்டது.
மொத்தமாக, 2026–2028க்குள் 53,000க்கும் அதிகமான வீடுகள் MOP-ஐ எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இது 2023–2025 MOP நிறைவு பெற்ற 34,000 வீடுகளை விட அதிகமாகும்.