சிங்கப்பூரில் திரை நட்சத்திரங்களின் சங்கமம் : "Star Awards - 2026"
சிங்கப்பூரில் உள்ளூர் சீனா மொழிப் பொழுது போக்கு துறையின் ஒரு முக்கிய வருடாந்திர நிகழ்வான ஸ்டார் விருதுகள் (Star Awards) 2026 நேற்று (ஏப்ரல் 19) இரவு MES தியேட்டரில் நடைபெற்றுள்ளது.
“ஒளிர பிறந்தவர்கள் ” என்ற கருப்பொருளின் அடிப்படையில் இந்த விருது விழா நடைபெற்றுள்ளது.
இந்த விருது வழங்கும் விழா மாலை 5:00மணி முதல் 6:30 மணி வரை நிகழ்ச்சியையும், அதனைத் தொடர்ந்து 7:00 மணி முதல் 10 மணி வரை பிரதான விருது வழங்கும் விழாவும் நடந்துள்ளது.
இதில் கலைஞர்கள் சிவப்பு கம்பளத்தில் கண்கவரும் தோற்றங்களிலும் வந்து ஒரு பிரம்மாண்டக் காட்சியை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆண்டு (2026) விருந்தினர் வரிசையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
பரிந்துரைக்கப்பட்ட பல கலைஞர்களில் தங்களின் மிகச் சிறந்த தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்ற நம்பிக்கையில், அதிகாலையிலேயே தயாராக தொடங்கினர்.
ஸ்டார் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட கலைஞர்களின் விபரங்கள் : சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் : ரிச்சி கோ மற்றும் ஜாங் செதோங் சிறந்த நடிகைக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் : ஹே யிஙயிங் மற்றும் ஹாங் லிங்
சிறந்த நடிகருக்கான விருது பரிந்துரைக்கப்பட்ட ரோமியோ சான் கூறியதாவது: இந்த ஆண்டு உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால் நான் ஸ்டார் விருதுகளில் இருந்து வெளியேறிவிட்டேன். ஒரு சூப்பர் ஸ்டார் ஆக நான் முதல் 10 படங்களுக்குள் வர வேண்டியதில்லை. அதனால் இது மிகவும் நிம்மதியாக இருக்கிறது. மற்றவர்கள் பதட்டத்தை என்னால் பார்க்க முடிகிறது. அதுதான் மிகப்பெரிய வித்தியாசம். ஆனாலும் நான் இன்னும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். அதனால் நான் முன்பை போலவே பதட்டமாக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹாங் லிங் கூறியதாவது: உண்மையில் பரிந்துரைக்கப்பட்டதற்கே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இந்த ஆண்டு நான் பரிந்துரைக்கப்படுவேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை எனக் கூறி உள்ளார்.
விருதை வழங்குவதற்காக ஜூலியன் சியுங், அடா சோய், போவி லாம், லுவோ யுன்சி மற்றும் ஹ்சீ யிங் – சுவான் ஆகியவர்கள் கலந்து கொண்டு விருது விழாவை சிறப்பித்துள்ளனர்.
அனைத்துப் பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு மீடியாகார்ப் ஸ்டார் அவார்ட்ஸ் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பொதுமக்கள் பார்வையிடலாம்.