பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் பரிசுப் பொதி..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (05.08.25) ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆரம்பகால குழந்தைப் பருவ மேம்பாட்டு நிறுவனம் (ECDA) மற்றும் பல ஆன்லைன் தளங்கள் இணைந்து நடத்திய சாலை நிகழ்ச்சியில், சுமார் 34,000 பொதுமக்கள் பாலர் பள்ளி மற்றும் ஆரம்பகால தலையீட்டு ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவித்தனர்.
நாட்டின் பணியாளர்களில் வெறும் 1% ஆக இருக்கும் பாலர் பள்ளி கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,நடத்தப்பட்ட “99% for the 1%” தொடர் நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
அதே நாளில் (01.08.25), ஒன் பொங்கோலில் நடைபெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டத்திலும், சமூக நிறுவனம் பாலர் பள்ளி சந்தை மற்றும் சிங்கப்பூர் ஆரம்பகால குழந்தைப் பருவ ஆசிரியர்கள் சங்கம் இணைந்து, தீவு முழுவதும் உள்ள பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுப் பொதிகளை தொடர்ந்து பத்தாவது ஆண்டாக வழங்கினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறையின் இணை அமைச்சர் கோ பெய் மெங்,“ஒரு குழந்தையின் வளர்ச்சியில் ஆரம்பகாலக் கல்வி மிக முக்கியமான கட்டமாகும். இதில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் சம அளவில் பங்கு வகிக்கிறார்கள். ஆசிரியர் தினத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் சமூகத்தின் நன்றியையும் ஆதரவையும் பெறத் தகுதியானவர்கள்” என்று வலியுறுத்தினார்.