ஜின்மின் கட்டுமான தளத்தில் விபத்து..!! என்ன நடந்தது..??

ஜின்மின் கட்டுமான தளத்தில் விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஜின்மின் பகுதியில் முன் விற்பனை HDB பிளாட் கட்டுமான தளத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது. அங்கு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, மொபைல் கிரேனின் ஜிப் திடீரென உடைந்து தரையில் விழுந்ததில், 37 வயது தொழிலாளர் ஒருவர் காயமடைந்தார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (10.19.25) மாலை 5.25 மணியளவில் நடந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

காயமடைந்த தொழிலாளர் உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு காயங்கள் காரணமாக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இச்சம்பவம் குறித்து வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) தெரிவித்ததாவது, விபத்து நடந்த நேரத்தில் தொழிலாளர்கள் மொபைல் கிரேனை அகற்றிக் கொண்டிருந்தனர்.கிரேனின் பூமை இறக்கும் போது திடீரென உடைந்ததால் ஜிப் கீழே விழுந்தது.இது மோ செங் கிரேன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளி மீது மோதியது.

காயமடைந்த தொழிலாளி மீட்கபட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தது.

காயமடைந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு தேவையான ஆதரவையும் உதவியையும் வழங்க, ஒப்பந்ததாரரான குவான் யோங் கட்டுமான பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதாக வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக HDB தெரிவித்தது.

மேலும் வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு முக்கியமானது என்றும், இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகளின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருவதாகவும் கூறியது.மேலும், தங்களின் மற்ற தளங்களின் பணியிட பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று HDB வலியுறுத்தியுள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK