சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் மரபணு மதிப்பீட்டு மையம் (GAC) இன்று (19.01.26) அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது.தேசிய இதய மையத்தின் ஏழாவது மாடியில் அமைந்துள்ள இந்த மையம்,குடும்ப ஹைப்பர்கொலஸ்டிரோலீமியா (FH) எனும் மரபணு நோயுக்கான மரபணு சோதனை மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.
இந்த நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் சுமார் 140 பேரில் ஒருவருக்கு FH இருப்பதாகவும், ஆனால் பெரும்பாலானோர் ஆரம்பத்திலேயே கண்டறியும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற நோய் சிகிச்சை இல்லாவிட்டால், ஆரம்பகால இதய நோய்கள் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகமாகும் என்று கூறப்படுகிறது.