விமானக் கண்காட்சி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட அவசர மீட்பு பணி..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு கப்பலில் இருந்து பணியாளரை அவசரமாக வெளியேற்றும் நடவடிக்கைக்காக, சிங்கப்பூர் விமானப்படை (RSAF) ஹெலிகாப்டர் ஒன்று இன்று(07.02.26)காலை உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
தற்போது சிங்கப்பூர் விமானக் கண்காட்சிக்காக நிறுத்தப்பட்டுள்ள சிங்கப்பூர் விமானப்படை, இன்று (ஜூலை 7) தனது பேஸ்புக் பதிவில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த பதிவின் படி, H225M மீடியம் லிஃப்ட் ஹெலிகாப்டர் ‘RESCUE 10’ இன்று காலை, உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்ட கப்பல் பணியாளர் ஒருவரை வெளியேற்றும் பணியை பெற்றது.
ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அந்த பணியாளர் பாதுகாப்பாக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனைக்கு வந்தபோது அவர் சுயநினைவுடனும் நிலையான நிலையிலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியாளர் விரைவில் குணமடைய வேண்டும் என்று சிங்கப்பூர் விமானப்படை தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
மேலும், உயிர்களை காப்பாற்ற 24 மணி நேரமும் தயாராக இருக்கும் விமானப்படை குழுவினரும் மருத்துவப் பணியாளர்களும் உயர்ந்த பாராட்டுக்கு உரியவர்கள் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.