கைது செய்யப்பட்டவர்களில் பெய்கியாவோ சாலையில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் சட்ட அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அதிக அளவிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்த போதை பொருட்கள் தொடர்பான குற்றங்களுக்காக 30 வயது ஆண் ஒருவரும் 16 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து CNB மே 22ஆம் தேதி அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மே 18 முதல் 22 ஆம் தேதி வரை நாடு முழுவதும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை நடத்தியதாகவும், அதில் $5,637 ரொக்க பணம் மற்றும் $200,000 அதிகமான போதைப் பொருட்கள் ( ஹெராயின், கஞ்சா, மெத்தம்பெட்டமைன்) பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆங் மோ கியோ, பெடோக், புக்கிட் பாடோக், ஜூரோங் வெஸ்ட், நார்த் பிரிட்ஜ் ரோடு, புங்கோல் மற்றும் டாம்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நார்த் பிரிட்ஜ் ரோடு பகுதியில் மே 18ஆம் தேதி அன்று காலை போதைப்பொருள் பயன்படுத்தியதாக 12 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பகுதியில் மீண்டும் அமலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
அங்கே 30 வயது ஆண் ஒருவரும், 16 வயது பெண் ஒருவரும் வீட்டுக்குள் இருந்தனர். அவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு அதிக அளவிலான போதைப் பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், ஒரு சிறுமியைப் போதைப்பொருள் பயன்படுத்த அனுமதித்த சந்தேகத்தின் பேரிலும் 30 வயது நபரை கைது செய்துள்ளனர். மேலும் 16 வயது சிறுமி போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி நடத்தி வருகின்றனர்.