சிங்கப்பூரில் புதிய பட்டதாரிகளா நீங்க..? அப்போ இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் முதல், சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள் அரசு மானியத்துடன் கூடிய பட்டதாரி தொழில் பயிற்சி திட்டங்கள் (GRIT & GRIT@Gov) மூலம் இன்டர்ன்ஷிப் செய்ய விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்பட்டவர்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது அரசு துறைகளில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை பயிற்சி பெறுவார்கள்.
இந்த காலத்தில், அவர்களுக்கு மாதாந்திரம் $1,800 முதல் $2,400 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதில் 70% தொகையை அரசு வழங்கும்.மேலும் மீதி தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்கும்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்ததாவது, ஆரம்பத்தில் 800 பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. Grab, Micron, OCBC, ST Engineering போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன.
இந்தத் திட்டம், சமீபத்தில் பட்டம் பெற்றவர்கள், தேசிய சேவையை முடித்தவர்கள் மற்றும் இந்த ஆண்டு பட்டம் பெற்றாலும் அடுத்த ஆண்டு சான்றிதழ் பெறுவோர் ஆகியோருக்குப் பயன்படும்.
பயிற்சியின் போது பட்டதாரிகள் டிஜிட்டல் மார்க்கெட்டிங், வணிக பகுப்பாய்வு, பொறியியல், உத்தி மற்றும் திட்டமிடல் போன்ற துறைகளில் அனுபவத்தைப் பெறுவர்.
அரசாங்கம் இந்த முயற்சியால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதோடு,அவர்களுக்கு தொழில் வாழ்க்கையை ஆராய சிறந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறது.