OCBC–ICF கூட்டாண்மை..!!!பணியாளர்களின் திறன் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் OCBC வங்கி மற்றும் சர்வதேச பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு (ICF) இணைந்து, 2027 இறுதிக்குள் குறைந்தது 100 மூத்த தலைவர்களுக்கு ICF பயிற்சி சான்றிதழ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
இரு தரப்பினரும் இன்று (22.08.25) அதிகாரப்பூர்வமாக ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இது, சிங்கப்பூர் வங்கி நிறுவனமும் ICF-மும் இடையே கையெழுத்தான முதல் மூலோபாய கூட்டாண்மை ஆகும்.
சான்றிதழ் பெற, பயிற்சி பெறுவோர்:
💠 60 மணி நேர பயிற்சியாளர் வகுப்புகள்,
💠 100 மணி நேர நிஜ உலக அனுபவம்,
💠 சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளருடன் 10 மணி நேர வழிகாட்டல் பயிற்சி முடிக்க வேண்டும்.
மேலும், அறிவு பரிமாற்றம் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்காக கருத்தரங்குகள், பணிமனைப்புகள் நடத்தப்படவுள்ளன.
🔶️ 90% வணிகத் தலைவர்களும் ஊழியர்களும் “எல்லா தலைவர்களும் பயிற்சி திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும்” என்று நம்புகின்றனர்.
🔶️ 70% க்கும் மேற்பட்டோர், இந்த திறன்கள் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், உற்பத்தித்திறன், ஈடுபாடு மற்றும் குழு ஒற்றுமையை மேம்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.
பணியாளர் மேம்பாட்டிற்காக, OCBC 2023 முதல் 2025 வரை S$9.5 மில்லியன் கூடுதலாக S$5.7 மில்லியன் ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டு, AI-ஆற்றல்மிக்க MOBI தொழில் மேம்பாட்டு உதவியாளரை அறிமுகப்படுத்திய வங்கி, தற்போது உள் குறுகிய கால பணித்திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல் திட்டங்கள் மூலமாக ஊழியர்களின் திறன்களை விரிவுபடுத்தி வருகிறது.