E Pass மற்றும் TEP Pass இல் செல்பவர்கள் அதிகமாக தற்பொழுது திருப்பி அனுப்பப்படுகிறார்கள். இதற்கான காரணம் அவர்கள் சிங்கப்பூர் இமிகிரேஷனில் தவறான தகவலையும் அவர்கள் IP இல் பொய்யான தகவல்களும் இருப்பதுதான்.
அவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்கள் பெரும்பாலானோர் மிகப் பெரிய தவறை செய்கிறார்கள். அது என்ன என்றால் திருப்பி வந்த பிறகு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை சொல்லாமல் பல இடங்களில் மீண்டும் சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்கிறார்கள். இதுபோல் செய்வது மிகவும் தவறு. ஏனென்றால் உங்களுக்கு விசாவே வந்தாலும் உங்களால் சிங்கப்பூர் Immigration ஐ தாண்ட முடியாது.
அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நீங்கள் திருப்பி அனுப்பப்பட்டவுடன் உங்கள் ஏஜெண்ட் மூலமாகவோ அல்லது நன்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ 14A form Submit செய்ய வேண்டும். இதை நீங்கள் Submit செய்து நீங்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் வரலாம் என்ற பதில் வந்தவுடன் தான் நீங்கள் திரும்ப சிங்கப்பூர் செல்ல முடியும். இதை நீங்கள் Submit செய்யாமல் மீண்டும் சிங்கப்பூர் எத்தனை முறை போனாலும் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படுவீர்கள். எனவே தயவு செய்து நீங்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்.
உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயவுசெய்து இந்த எண்களை தொடர்பு கொள்ளவும். ☎️9159616396 ☎️8124738010 ☎️7550207508