சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!!

சிங்கப்பூரில் லஞ்ச வழக்கு..!! சீனப் பெண் மீது குற்றச்சாட்டு.!!

சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் புலனாய்வாளர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கியக் குற்றத்திற்காக சீன நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் மீது நீதிமன்றத்தில் இன்று (மே 14) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பணியகம் (CPIB) இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக வருகை அனுமதி சீட்டில் சிங்கப்பூருக்குள் நுழைந்த வாங் சிலிங் என்ற பெண் சிங்கப்பூருக்கு சுற்றுலாப் பயணியாக வந்துள்ளார்.

மெரினா பே சாண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சிக்காக இறக்குமதி செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ சாதனங்கள் தொடர்பாக தனக்கும் தனது கணவருக்கும் எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாது என நினைத்துள்ளார்.

அதற்காக சுகாதார அறிவியல் ஆணையத்தின் புலனாய்வாளர் யோங் சிஃபூங் என்பவரிடம் அமலாக்க நடவடிக்கை எடுக்க மாட்டார் என்ற நம்பிக்கையில் கடந்த மாதம் (ஏப்ரல்)22ஆம் தேதி அன்று $100 லஞ்சமாக கொடுக்க முயன்றுள்ளார்.

அந்தப் பெண் கொடுத் லஞ்சபணத்தை புலனாய்வாளர் வாங்க மறுத்துள்ளார். இந்த வழக்கை ஊழல் தடுப்பு புலனாய்வுப் பணியகத்திற்கு அவர் மாற்றியுள்ளார்.

வாங் சீலிங் லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றமாகும். ஊழல் தடுப்புச் சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் இந்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் $1,00,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளவு இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஊழல் தடுப்புப் புலனாய்வுப் பணியகம் (CPIB) ஊழலுக்கு எதிராக சிங்கப்பூர் கடுமையான சகிப்புத்தன்மையற்றக் கொள்கையைக் கடைபிடிப்பதாகவும், ஊழல் தொடர்பான அனைத்து புகார்களையும் அறிக்கைகளையும் தாங்கள் விசாரித்து வருவதாகவும் வலியுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK