சாங்கி விமான நிலையத்தின் T3 அப்கிரேட்..!! போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் உள்ள உலகின் முதன்மையான மற்றும் விருது பெற்ற சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான சாங்கி விமான நிலையத்தின் 3- ஆம் முனையம் (Terminal 3) மிகப்பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து தற்காலிகப் போக்குவரத்து அமைச்சரான ஜெஃப்ரி சியாவ் (Jeffery Siow) அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த மேம்பாட்டுப் பணிகளுக்கான குத்தகைக்கு இந்த ஆண்டின் (2026 பிற்பாதியில் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயணிகள் சொந்தமாக பயணப்பதிவு செய்தல், பாதுகாப்புச் சோதனை மற்றும் கழிவறைகளைச் சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக மூன்றாம் முனையத்தில் கூடுதல் மின்னிலக்க , இயந்திரவியல் தொழில்நுட்ப அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் நடைபெறும் “சாங்கி ஏர்லைன் விருது ” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இது குறித்த தகவலை அமைச்சர் சியாவ் கூறியிருக்கிறார்.
புதிதாக கட்டப்படும் ஐந்தாம் முனையம் (T5) கட்டி முடிக்கப்படும் முன்பே , விமான நிலையத்தில் கடைசியாக மேற்கொள்ளப்படும் முக்கிய சீரமைப்பு பணி இதுவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கட்டப்பட்டவரும் ஐந்தாம் முனையம் (T5) 2030களின் நடுப்பகுதியில் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
மூன்றாம் முனையம் கையாளக்கூடிய ப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே மேம்பாட்டு பணிகளின் இலக்கு என்று திரு சியாவ் தெரிவித்திருக்கிறார். இந்த மேம்பாடானது உச்சநேரத்திற்கு சரியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
ஐந்தாம் முனையம் (T5) கட்டப்படுவதற்குள் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க கூடும் எனவும், அவர்களுக்கு தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்குவது எங்களுக்கு முக்கியம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது செயல்பாட்டில் இருக்கும் முனையங்களை மேம்படுத்த $3 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையத்தின் குழுமம் 2024 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது. இதில் மூன்றாம் இணையத்தின் மேம்பாட்டு பணிகளும் அடங்கும்.