சூதாட்டத்தால் நேர்ந்த சோகம்..!!! சீனத் தூதரகத்தின் கடும் எச்சரிக்கை…!!!

சூதாட்டத்தால் நேர்ந்த சோகம்..!!! சீனத் தூதரகத்தின் கடும் எச்சரிக்கை...!!!

சிங்கப்பூர்: சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரு சீனக் குடிமகன், சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து,சிங்கப்பூரிலுள்ள சீனத் தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சிங்கப்பூருக்கு வருகை தரும் சீன சுற்றுலாப் பயணிகளும், அங்கு வசிக்கும் சீனக் குடிமக்களும் தங்கள் சட்ட விழிப்புணர்வை வலுப்படுத்தி, சூதாட்டத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூதரகத்தின் இணையதளத்தில் 14ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், சம்பவத்தின் பின்விளைவுகளை கையாள்வதில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு தேவையான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், கடந்த சில ஆண்டுகளில் சூதாட்டம் தொடர்பான பல உயிரிழப்புச் சம்பவங்களை அதிகாரிகள் கையாள்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனச் சட்டத்தின் கீழ் சூதாட்டம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று தூதரகம் வலியுறுத்தியுள்ளது. குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம் எல்லைத் தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகளும் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் சூதாட்ட விடுதிகள் சட்டபூர்வமாக இயங்கினாலும், அவற்றில் ஈடுபடும் சீனக் குடிமக்கள் சீனச் சட்டத்தை மீறியவர்களாகக் கருதப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சூதாட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில் அல்லது பிறரை அதில் ஈடுபடுத்துவதில் பங்கேற்பவர்கள் சட்டரீதியான கடுமையான பொறுப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற “சட்டவிரோத செயல்களுக்கு தூதரக பாதுகாப்பு வழங்க முடியாது” என்று அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK