சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..??

சாங்கி விமான நிலையத்தில் சீன நபர் கைது..!!காரணம் என்ன..??

சிங்கப்பூர்: தென்கொரியாவிடம் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வங்கி அட்டைகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரின் வங்கி அட்டைகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் நேற்று (மே 20) இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 18ஆம் தேதி அன்று பிற்பகல் 3:40 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1-ல் நடத்தப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையின் போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

19ஆம் தேதி மாலை காவல்துறை இந்த சம்பவம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதில் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அவருக்கு சொந்தமில்லாத 2 வங்கிய அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்த முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் பாதிக்கப்பட்டவரின் பயணப் பெட்டியை மேற்புறப் பெட்டியலிருந்து எடுத்துள்ளார். அதற்குள் இருந்த பணப்பையில் இருந்து 2 வங்கி அட்டைகளை எடுத்தது தெரியவந்துள்ளது.

பின்னர் அவர் அந்த பணப்பையை மீண்டும் பயணப்பெட்டிக்குள் வைத்து விட்டு பெட்டி இந்த பழைய இடத்திலேயே வைத்துள்ளார். தனது வங்கி அட்டைகள் திருடப்பட்டு இருக்கிறது என்பதை பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாத அளவிற்கு இந்த திருட்டு நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது குற்றவியல் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ் மற்றும் டோக்கியா மாநாட்டுச் சட்டத்தின் கீழ் திருட்டு குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும்.

அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK