ஒரே நாளில் லட்சக்கணக்கான பயணிகளை கையாளும் மிகவும் ‘பிசியான’ விமான நிலையங்களில் ஒன்றாக பிராங்பர்ட் விமான நிலையம் உள்ளது.
நேற்று (ஜூன் 5)மதியம் 1 மணியளவில் இந்த விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு போயிங் நிறுவனத்துக்குச் சொந்தமான லுஃப்தான்ஸா விமானம் இயக்கப்படவிருந்தது.
பயணிகள் இந்த விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் முன்சக்கரப் பகுதியில் எந்திர கோளாறு ஏற்பட்டு திடீரென உள்வாங்கியது.
இதனால் விமானத்தின் முன்பகுதி பயங்கர சத்தத்துடன் தரையில் மோதியது. 200-க்கும் மேற்பட்டவர்கள் அமரக்கூடிய வகையான இந்த விமானத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானிகள், ஊழியர்கள் என 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.