சிங்கப்பூரில் பட்டப் பகலில் கார் திருட்டு..!!2 மணி நேரத்திலேயே திருடன் கைது..!!

சிங்கப்பூரில் பட்டப் பகலில் கார் திருட்டு..!!2 மணி நேரத்திலேயே திருடன் கைது..!!

சிங்கப்பூரில் பட்டப்பகலில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை திருடியதாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் கிடைத்ததை ஒட்டி விரைவாக செயல்பட்டு 2 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

நேற்று (ஜூன் 5) பிற்பகல் சுமார் 1.50 மணி அளவில் காவல்துறையினருக்கு ஒரு புகார் கிடைத்துள்ளது. டோவா பேயோ , லோரோங் 4-ல் உள்ள ஒரு திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது கார் திருடப்பட்டிருப்பதாக காரின் உரிமையாளர் புகார் அளித்திருந்தார்.

விசாரணையைத் தொடர்ந்த காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு புகார் கிடைத்த 2 மணி நேரத்திற்குள் திருடனை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட காரும் மீட்கப்பட்டு உரிமையாளரிடம் கொடுக்கப்பட்டது.

39 வயதான அந்த நபர் மீது இன்று ஜூன் 6) நீதிமன்றத்தில் கார் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. அந்த நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

நன்கு ஒளியூட்டப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல், கார் சாவிகள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல்களைப் பாதுகாப்பாக வைத்திருத்தல், வாகனத்தை விட்டு செல்வதற்கு முன் பண அட்டைகள் மற்றும் மடிகணினிகள், கைபேசிகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களைப் பத்திரமாக வைத்தல் உள்ளிட்ட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

திருட்டு அபாயத்தை குறைப்பதற்காக வாகனங்களில் இருந்து எவ்வளவு நேரம் விலகி இருந்தாலும் அனைத்து ஜன்னல்களும் மூடப்பட்டிருப்பதையும் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதையும் உறுதி செய்யுமாறு கார் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK