சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!!

சிங்கப்பூர் MRT மாஸ்டர் பிளான்..!!சாங்கி விமான நிலையம் 5க்கு நேரடி இணைப்பு..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தாம்சன்–ஈஸ்ட் கோஸ்ட் (TEL) MRT பாதை, சாங்கி விமான நிலையம் முனையம் 5 (Terminal 5) வரை நீட்டிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது.

இந்த பாதையில் புதிய MRT நிலையம் ஒன்று சேர்க்கப்பட உள்ளது.

தற்காலிகமாக TE32 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய MRT நிலையம், TEL மற்றும் குறுக்கு தீவு பாதை (Cross Island Line – CRL) இணைக்கும் ஒரு முக்கிய பரிமாற்ற நிலையமாக அமைக்கப்படும். மேலும், இது CRL பாதையின் ஆரம்ப நிலையமாகவும் செயல்படும்.

சுங்கே பெடோக் நிலையத்திலிருந்து தொடங்கி, TE32 வரை 14 கிலோமீட்டர் நீளமான இந்தப்புதிய பாதை, TEL இன் தானா மேரா நிலையத்துடன் இணைக்கப்படும்.

இதன் மூலம், கிழக்கு கடற்கரை பாதையில் உள்ள பயணிகளுக்கு சாங்கி விமான நிலையம் தொடர்பு வசதி பெற அதிக வாய்ப்பு உண்டாகிறது.

அதே நேரத்தில், CRL பாதை தங்களது செயல்பாட்டை சாங்கி முனையம் 5 வரை 5.8 கிலோமீட்டர் நீட்டிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய நிலையங்கள் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில், கிழக்கு–மேற்கு பாதையில் உள்ள சுரங்கப்பாதை அமைப்புகளில் பராமரிப்பு மற்றும் கட்டுமான பணி நடைபெறவுள்ளதால், சில ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படும். இதற்கான முழுமையான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், சாங்கி விமான நிலையத்தின் ஐந்தாவது பயணிகள் முனையத்தின் (Terminal 5) கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் தொடங்கிய நிலையில், அது 2030களின் நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம்,சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் வருடத்திற்கு 50 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயனடைவார்கள்.

இந்த புதிய முனையம் MRT, பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நிலப் போக்குவரத்து மையமாக அமையும். இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவு முழுவதும் எளிதாக இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan