சிங்கப்பூரில் கொள்ளை அடிக்க முயன்றவருக்கு என்ன தண்டனை என்று தெரியுமா?
26 வயது ஹேரி சியா யின் சியாங் என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சிகரெட் வாங்க தமது பாட்டி பணம் தராததால் தன் மீது அவருக்கு பாசம் இல்லை என்று முடிவுக்கு வந்தார்.
இவ்வாறு இருப்பதை விட காவல்துறையால் கைது செய்யப்படுவது மேல் என அவர் கருதினார்.
அதிகாலை 3 மணி அளவில் சுவாசூ காங்கில் உள்ள ஒரு கடையில் அவர் நுழைந்தார்.
கடையில் இருந்த குளிர்பான பாட்டில் ஒன்றை திருடியதாக அங்கிருந்த காசாளிடம் கூறினார் அந்த குளிர்பான பாட்டிலை திருப்பிக் கொடுத்தால் எந்த நடவடிக்கும் எடுக்கப்படாது என்று அந்த 53 வயது காசாளர் தெரிவித்தார்.
இத எடுத்து சியா கடையிலிருந்து வெளியேறினார் பிறகு மீண்டும் அதே கடைக்கு சென்றார் இம்முறை அவர் கையில் உலோக தடி ஒன்று இருந்தது.