சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மின் சிகரெட் உபயோகம்..!!!

சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் நேற்று (ஆகஸ்ட் 27) காலை மின் சிகரெட் இருக்கிறதா? என்ற சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது 890க்கும் மேற்பட்ட மின் சிகரெட்டுகளோடு மலேசியா ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குளிர்சாதன பெட்டிகளை ஏற்றி வந்த வேனை அதிகாரிகள் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

வேனில் இருந்த பெட்டிகளில் மின் சிகரெட் மறைத்து வைத்தது சோதனையின் போது தெரியவந்தது. அவரது வேனில் சுமார் 6,700 மின் சிகரெட் உதிரி பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

மேற்கொண்டு சோதனை செய்தபோது குளிர்சாதனங்களிலும் மின் சிகரெட்டுகள் அவற்றின் உதிரி பாகங்கள் ஆகியவை ஒழித்து வைக்கப்பட்டது அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கைது செய்யப்பட்ட மலேசியா ஆடவரிடம் சுகாதார அறிவியல் ஆணையம் மேலும் விசாரணை நடத்தி வருகிறது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் 19 மின் சிகரெட் கடத்தல் முயற்சிகளை அதிகாரிகள் கண்டறிந்து தடுத்துள்ளனர்.

அந்த காலகட்டத்தில் சுமார் 90 ஆயிரம் மின் சிகரெட்டுகளும் உதிரி பாகங்களும் கைப்பற்றப்பட்டது என குடி நுழைவு சோதனை சாவடிகள் ஆணையம் facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan