இது குறித்த தகவலை பைபர் ஆப்டிக் நிறுவனமான நெட் லிங்க் டிரஸ்ட் தனது இணையதளத்தில், ஒரு தகவலை தெரிவித்துள்ளது. இந்த இணைய பாதிப்பால் ஏறத்தாழ 3,000 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
உங்கள் சேவையில் பாதிப்பை ஏதேனும் ஏற்பட்டிருந்தால், அந்த சிரமத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி கூடிய விரைவில் உங்களுடைய சேவையை சரி செய்ய, நாங்கள் உங்கள் இணைய சேவை வழங்குனருடன் இணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளனர்.
சிங்டெல், ஸ்டார்ஹப் மற்றும் ஃபர்ஸ்ட் டெலிகாம் உள்ளிட்ட பல உள்ளூர் தொலைதொடர்பு நிறுவனங்கள் இன்று (ஏப்ரல் 18) காலை ஃப்ராட்பேண்ட் நெட்வொர்க் செயலிழப்பு புகார்களில் திடீர் அதிகரிப்பை சந்தித்துள்ளதாகவும் இதனுள் எந்த நிறுவனமும் தப்ப முடியவில்லை என்று தெரியவந்துள்ளது.