PIE விரைவுச் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து…!!

PIE விரைவுச் சாலையில் ஏற்பட்ட தீ விபத்து...!!

சிங்கப்பூர்: SBS Transit நிறுவனத்தின் பேருந்து ஒன்று PIE விரைவுச்சாலையில் இன்று (13.02.26) காலை தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் காலை சுமார் 11.45 மணியளவில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துவாஸை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து,கிளமெண்டி சாலை அருகே திடீரென தீப்பற்றியது.தீ வேகமாகப் பரவியதால் அந்தப் பகுதியில் சில நேரம் போக்குவரத்து தடை இருந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படை (SCDF) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு தண்ணீர்ப் பாய்ச்சும் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய SBS Transit நிறுவனத்தின் பேச்சாளர், சம்பவம் நேர்ந்த பேருந்து அப்போது சேவையில் இல்லை என்று கூறினார். பேருந்தில் பயணிகள் எவரும் இல்லாததுடன், ஓட்டுநரும் சரியான தருணத்தில் பாதுகாப்பாக வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK