மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!!

மலேசியாவில் எரிபொருள் தட்டுபாடு..!! கால்டெக்ஸ் நிலையங்கள் பாதிப்பு..!!

கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மலேசிய மாநிலங்களில் உள்ள பல கால்டெக்ஸ் எரிபொருள் நிலையங்கள் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள கால் டாக்ஸி நிலையங்கள் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விநியோக தட்டுப்பாடுகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என, “கால்டெக்ஸ் மலேசியா ” நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விநியோக தட்டுப்பாடுகளுக்கு துறைமுகத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தாமதங்களாக் காரணம் எனவும், இது எங்களின் திட்டமிட்ட பல விநியோகங்களைப் பாதித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம். வாடிக்கையாளர்களின் பொறுமைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி எனவும் அந்நிறுவனம் நேற்று (ஏப்ரல் 17) தனது பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளதால் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

உலகில் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு தேவைகள் கிட்டத்தட்ட 20% ஹோர்முஸ் நீரினை வழியாகவே விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK