சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!!

சிங்கப்பூரில் நல்லாசிரியர் விருது விழா..!!!

சிங்கப்பூரில் இன்று(30, ஆகஸ்ட்) தமிழ் முரசு, சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ் மொழி கற்றல் வளர்ச்சி குழு ஆகியவை இணைந்து நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடத்தியுள்ளது.

இவ்விழாவில் நல்லாசிரியர் விருதுக்காக 180 ஆசிரியர்கள் மொத்தம் 543 நியமனங்களை பெற்றனர்.

நான்கு தமிழாசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

தொடக்கப்பள்ளி பிரிவில் ஜியேமின் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ. காயத்ரியும் வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளி ஆசிரியர் நூர்மனிஷா சர்மனியும் விருது பெற்றனர்.

உயர்நிலைப்பள்ளி பிரிவில் புக்கிட் வியூ பள்ளி ஆசிரியர் ராமசாமி ஸ்டாலினும் குயின்ஸ்டவுன் பள்ளி ஆசிரியர் சரத்குமார் கணசேகரனும் விருது பெற்றனர்.

வாழ்நாள் சாதனையாளர் விருது:
குயின்ஸ்டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் முனைவர் விஜயராணி கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

பயிற்சி ஆசிரியர் விருது:
யிஷூன் டவுன் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் இப்ராஹிம் அஷ்ரஃப் அலிக்கு வழங்கப்பட்டது.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan