சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!!

சிங்கப்பூரில் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கிய மலேசியப் பெண்..!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரி போலவே நடித்து ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்ட 34 வயது மலேசிய பெண் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

மே 19ஆம் தேதி அன்று அப்பன் சிங்கப்பூரை விட்டு வெளியேற முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து 2 தங்கக் கட்டிகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் சிங்கப்பூரில் மோசடி கும்பல்களுக்கு துணைபோன சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள 26 ஆவது மலேசியர் இந்தப் பெண் என்று காவல்துறை நேற்று (மே 20) அறிவித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மோசடியில் சிக்கிய பெண்ணிடம் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) அன்று புகார் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தம்மை காவல்துறை அதிகாரி என்று கூறிக் கொண்ட ஒருவர் பண மோசடி நடவடிக்கைகளுக்காக விசாரணை நடத்துவதாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறியுள்ளார்.

பிறகு விசாரணைக்காக வங்கி கணக்கையும் அவரது தனிப்பட்ட விவரங்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், வங்கியில் இருந்து பணத்தை எடுத்து அதனை சொந்த நகைகளுடன் சேர்க்க வேண்டும் எனவும் இதனை தாம் சொல்லும் முகவரியில் சேர்க்க வேண்டும் எனவும் அந்த மர்ம நபர் கூறியதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அதற்கு இணங்க $13,700 மக்கள் தொகையும் நகைகளையும் கோவன் அருகே வந்த 34 வயது மலேசியப் பெண்ணிடம் கொடுத்துள்ளதாக புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் தான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரிந்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மோசடி தடுப்புப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளனர். பிறகு புகார் அளிக்கப்பட்ட அதே நாளில் மலேசியப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK