சிங்டெல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! SG Alert சோதனை நடத்த திட்டம்..!! எப்போது..??

சிங்டெல் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! SG Alert சோதனை நடத்த திட்டம்..!! எப்போது..??

சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர், இன்று (மே 6) பொதுமக்களின் பாதுகாப்பை பேணுவதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க விரைவாக தெரிவிக்கும் வகையில் சிங்டெல் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி செயல்படுத்தப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலமாக ஏதேனும் பெரும் தீ விபத்து ரசாயன கசிவு அல்லது பயங்கரவாத தாக்குதல் போன்ற அவசர நிலை ஏற்படும் வண்ணம் எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 10 அன்று நடைபெறும் சோதனையின் போது தரவு மற்றும் திட்டங்களை பயன்படுத்தும் வெளிநாட்டு பயணிகள் உட்பட புதிய தொலைதொடர்பு வலை அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அன்று இணைய இணைப்பு இல்லாமலேயே அவர்களது கைபேசிகளில் எச்சரிக்கை வந்துள்ளன. இதனால் மக்கள் பயப்படத் தேவையில்லை என அதிகாரிகள் பொது மக்களுக்கு உறுதி அளித்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை செய்தியானது ‘SG Alert’ என்ற தலைப்புடன் ஒரு பாப் அப் அறிவிப்பாக தோன்றும் அதனுடன் 10 வினாடி ஒலி மற்றும் அதிர்வும் இருக்கும். இந்த எச்சரிக்கை செய்தி தொலைபேசியின் “Do not Disturb” மற்றும் “Silent Mode” அமைப்புகளை மீறி செயல்படுவதன் காரணமாக அவசர காலங்களில் பொதுமக்கள் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை பெறுவதை இது உறுதி செய்யும்.

பழைய தொலைபேசி மாடல்களில் சிக்கல்கள் இருப்பதன் காரணமாக எச்சரிக்கையின் தலைப்பு “SG Alert'” என்பதற்கு பதிலாக “Presidential Alert” என காட்டப்படும்.

பொதுமக்கள் எந்த ஒரு மொபைல் செயலியையும் பதிவிறக்கம் செய்யாமலோ அல்லது கணக்கை பதிவு செய்யாமலோ எச்சரிக்கை செய்திகளை பெறலாம். இருந்தாலும் எச்சரிக்கை செய்திகளை சரியாக பெறுவதை உறுதி செய்வதற்கு கைபேசியை OS க்கு புதுப்பித்திருத்தல் அவசியம். எச்சரிக்கை செய்திகள் தற்போது சமீபத்திய ஆப்பிள் iOS 26.4 அல்லது அதற்கு பெண் வந்த பதிப்புகளிலும், இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 1ஆம் தேதிக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்குப்பின் வந்த பதிப்புகளிலோ மட்டுமே இந்த எச்சரிக்கை செய்திகள் ஆதரிக்கப்படும்.

குடிமை தற்காப்பு படையானது இந்த எச்சரிக்கை அமைப்பினை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஸ்டார்ஹப் பயனர்களுக்கும் 2027 ஆம் ஆண்டின் இடைக்காலத்திற்குள் M1 மற்றும் சிம்பா பயனர்களுக்கும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.

இது பெரிய அளவிலான அவசரகல எச்சரிக்கை அமைப்பினை அறிமுகப்படுத்துகின்றான் ஒரு முதல் கட்டத்தில் பகுதியாக கருதப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK