சிங்கப்பூரில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்-2026..!!
இன்று சர்வதேச மகளிர் தினம்(08.03.26) ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் பெண்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்குள்ள பல உள்ளூர் தலைவர்கள் மகளிர் தினத்தை கொண்டாடி மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் ஒரு சமமான எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்த ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள்: “ஆதாயத்திற்காக கொடுங்கள்”
இதற்கு ஆதரவு மற்றும் பரஸ்பரத்தில் சக்தியை எடுத்துக்காட்டுவதாக சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சமூக ஊடகத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
வயது மற்றும் பாலினத்தை பொருட்படுத்தாமல் அனைவரும் அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் எனவும் பெண்களை மதிக்கும் மற்றும் ஆதரிக்கும் விதமாக அவர்களை சமத்துவமாகவும் சமூகத்தின் வலுவான அங்கமாகவும் இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் சமூக ஊடகங்களில் சர்வதேச மகளிர் தினத்திற்கான ஒரு காணொளி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதை அவர் பதிவு செய்தார் மற்றும் உள்ளூர் பெண்களுக்கு அஞ்சலி செலுத்தியும் அவர்களின் குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பணியிடங்களில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கியும் இந்த காணொளி பதிவில் கூறியுள்ளார்.
அதிலும் முக்கியமாக நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது சாதனை அளவாக எட்டி உள்ளது என்று நாடாளுமன்ற விவாதங்களை வளப்படுத்துவதாகவும் இதன் மூலம் சிறந்த கொள்கைகளை உருவாக்க உதவுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
போக்குவரத்து மற்றும் தேசிய மேம்பாட்டுக்கான மூத்த துணை அமைச்சர் சன் சூலிங், தனது மகளுக்கு ஒரு தாயாக வழங்க விரும்பும் பத்து அறிவுரைகளை அவர் பகிர்த்து உள்ளார். அதில் முக்கியமாக அவரது பலன்களை வளர்த்துக் கொள்ளவும் பலவீனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தன்னை மதிக்கவும் ஊக்குவிப்பதும் இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.