சிங்கப்பூரில் AI பயன்படுத்தி சொத்து பிரச்சனை தொடர்பான வழக்கில் பிரதிவாதி தரப்பின் மூலமாக வாதாட வந்த வழக்கறிஞர்கள் அவர்களுடைய பாதத்தின் போது இரண்டு பழைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பேசினார்.
இப்போது பிரதிவாதியின் உடைய முதன்மை வழக்கறிஞர் தனது ஆராய்ச்சி பணிக்காக மற்றொரு வழக்கறிஞரின் உதவியை நாடி சென்றார்.
உதவ வந்த வழக்கறிஞர் அவருடைய அலுவலகத்தில் உள்ள சட்ட உதவியாளரை ஆலோசித்து அவர் ஏஐ கருவியை பயன்படுத்தி உள்ளாரா என்பதை குறித்த தகவல் தெரியவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.
அதிலும் முக்கியமாக சிவில் வழக்கின் இந்த வாதங்களில் இரண்டு போலியான வழக்குகளை உதாரணங்களாக வழக்கறிஞர்கள் பயன்படுத்தினர்.
இந்த தவறான தகவல்களை வழக்கறிஞர்கள் கண்டுபிடித்து நீதிமன்றத்திடம் முறையிட்டதை அடுத்து நீதிபதி எஸ்மோகன் அவர்கள் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு வழக்கறிஞர்களும் தலா $5,000 செலுத்த உத்தரவிட்டார்.
நீதிபதி கூறிய அறிவுரை: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது தவறல்ல; மாறாக அதன் மூலம் கிடைக்கும் தகவல்களை நிச்சயமாக சரி பார்ப்பது அவசியம் மேலும் பொறுப்பாகும் என்று வலியுறுத்தியுள்ளார்.