சிங்கப்பூரில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!

சிங்கப்பூரில் நடந்த தாக்குதல் சம்பவம்..!!

சிங்கப்பூரில் இன்று (08.03.26) அதிகாலை கிளார்க் கீ இன்று பகுதியில் தாக்குதல் சம்பவம் மனது நடந்துள்ளது.

இது குறித்த தகவலானது, sgfollowsall என்ற சமூக ஊடக பக்கத்தின் instagram பதிவில் வைரலாகி வந்தது. இந்த தகவலின் படி கிளார்க் கீ பகுதிக்கு அருகே இன்று(08.03.26) அதிகாலை 3 மணி அளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளது.

இதில் இரண்டு வெவ்வேறான இடங்களில் வெள்ளை நிற ஆடை அணிந்த ஒருவர் மற்றொரு நபரை குத்தியும் உதைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளார்.

தாக்குதல் சம்பவங்கள் வீடியோ காட்சியின் மூலம் பதிவாகியுள்ளது. இந்த காணொளி பதிவில் ஐந்து ஆண்கள் இருப்பதும் சாலையின் ஓரமாக அடர் நீல நிற செடான் நிறுத்தப்பட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.

இதில் வெள்ளை நிற ஆடை அணிந்த ஒருவர் தரையில் கிடந்த கருப்பு நிற ஆடை அணிந்த வரை பலமாக உதைத்துள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலமாக காயமடைந்த நபரை மற்ற இரண்டு ஆண்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியவரிடமிருந்து அவரை பாதுகாப்பாக மீட்டெடுக்க முயன்றனர்.

வீடியோவின் மற்றொரு பதிவில் பாதிக்கப்பட்டவர் சாலையின் நடுவே தனியாக அசையாமல் கிடப்பது தெரிய வந்தது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்த போது சம்பந்தப்பட்ட நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர் அவர்களை தேடிய போது தென்படவில்லை.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK