பொது இடத்தில் பயங்கரமான ஆயுதம் ஏந்திய நபர் கைது.!!
சிங்கப்பூர்:சைனாடவுனில் உள்ள ஃபோங் லாம் சந்தை மற்றும் உணவு மையத்தில் கத்தியை ஏந்தி நடந்துச் சென்றதாகக் கூறப்படும் 60 வயதுடைய ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில், மேல் குறுக்கு தெருவின் பிளாக் 531A-இல் உள்ள ஃபோங் லாம் சந்தை மற்றும் உணவு மையத்தில் நடைபெற்றது.