யூத தொப்பி அணிந்த சிறுவனை திட்டிய நபர்..!! சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!!
சிங்கப்பூர்: இந்த ஆண்டு (2025) மார்ச் மாதத்தில் யூத சமய தொப்பியை அணிந்திருந்த 14 வயது சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டிய நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அதற்கு முன்னதாக கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இஸ்ரேலியர் ஒருவரிடமும் அவரை கொல்லப் போவதாக சொல்லில் மிரட்டியுள்ளார். முகமது அரீஃப் இஸ்மாயில் என்ற 40 வயதுடைய நபர் அவர் மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளையும் மே 21ஆம் தேதி அன்று ஒப்புக்கொண்டுள்ளார்.
மற்றொருவரின் இன ரீதியான உணர்வுகளைப் புண்படுத்துதல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் முதியவரைக் காயப்படுத்தியது மற்றும் திருட்டு ஆகிய குற்றசாட்டுகளின் பெயரில் அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபர் பலமுறை சிறைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில் அந்த நபர் 34 வயதில் ஆஸ்திரேலியவைச் சேர்ந்த சமய உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய குற்றத்தையும் அந்த நபர் ஒப்பு கொண்டிருக்கிறார். அந்த குற்றத்திற்கு 3 வாரங்கள் சிறை தண்டனையை அரசு தரப்பு வழக்கறிஞர் கொங் ஸி வெய் அவர்கள் வழங்கியிருந்தார்.
சிறைக்கு சென்று விடுதலை செய்யப்பட்ட பிறகு, இந்த ஆண்டு (2026) மார்ச் 20 ஆம் தேதி பேருந்து எண் 858-ல் பயணம் செய்து கொண்டிருந்தபோது அந்த நபர் பேருந்தில் யூத சமய தொப்பி அணிந்திருந்த 14 வயது சிறுவனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு (2025) அக்டோபரில் காமன்வெல்த் அவன்யூவில் உள்ள டாக்சி நிறுத்தும் இடத்தில் 79 வயது முதியோரைத் தாக்கிய குற்றத்தையும் அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் அந்த நபர் கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதத்தில் தங்களின் ரோட்டில் உள்ள பேரங்காடி ஒன்றில் இருந்து 100 -க்கும் அதிக மதிப்புடைய 2 மதுபான பாட்டில்களையும் திருடியதாக கூறப்படுகிறது.