தென்னாப்பிரிக்காவில் மாயமான நபர்..!! விழுங்கியது முதலையா..??

தென்னாபிரிக்காவில் மாயமான நபர்..!! விழுங்கியது முதலையா..??

தென்னாப்பிரிக்காவில் கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது வியாபாரி ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

முதலை விழுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து, அதிகாரிகள் தீவிரப் பணியில் ஈடுபட்டபோது கோமட்டி ஆற்றில் முதலைக் கூட்டம் தென்பட்டதை அறிந்து, வியாபாரியை தின்றதாக சந்தேகிக்கப்பட்ட அந்த முதலையை கொன்று அதை கயிற்றில் கட்டி மீட்டனர்.

அந்த முதலையின் எடை 500 கிலோகிராம். நீளம் 4.5 மீட்டர்.

முதலையின் உடலை சோதித்த போது அதன் குடலில் மனித உடல் பாகங்களும் ஆறு காலணிகளும் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் முதலை தேடப்பட்ட வியாபாரியை தான் விழுங்கியதா என்று மரபணு சோதனை நடத்தப்பட்டு அதன் பிறகு கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலையை தேடிய அதிகாரிகளில் ஒருவர் அனுபவம் மிகுந்த ஒரு பதற்றத்தை அளித்ததாக பகிர்ந்துள்ளார்.

மேலும் முதலை எதை வேண்டும் என்றாலும் சாப்பிடும் அல்லது விழுங்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK