தொழிலாளர்களுக்காக புதிய நடவடிக்கை மேற்கொண்ட மனித வள அமைச்சகம்..!!!

தொழிலாளர்களுக்காக புதிய நடவடிக்கை மேற்கொண்ட மனித வள அமைச்சகம்..!!!

சிங்கப்பூரில் மனித வள அமைச்சகம் தொழிலாளர்களுக்காக ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அமலாக்க நடவடிக்கை மேற்கொண்ட போது மனிதவள அமைச்சகமானது பாதுகாப்பற்ற நடைமுறைகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. கிட்டத்தட்ட 1,253 பாதுகாப்பற்ற நடைமுறைகள் இருப்பதாக தகவலை சமூக வலைதளமான பேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ளது.

கட்டுமானம் உற்பத்தி கடல் சார்,சேவைகள், போக்குவரத்து, மற்றும் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு (2024) மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்களுக்கு வழுக்கி அல்லது தடுமாறி விழுந்ததால் பணியிடத்தில் காயங்கள் ஏற்பட்டது.

பணியிடத்தில் எஃகு தகடுகள் தட்டையாக வைக்கப்படுவதும், பாதைகள் தெளிவாக உள்ளனவா? என்பதையும், சாய்வு பாதைகள் வழுக்காத மேற்பரப்புகளால் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதையும், அதிக ஆபத்து உள்ள பகுதிகளில் வழுக்காத பாய்கள் போடப்பட்டுள்ளனவா? போன்றவைகளை முதலாளிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு (2025) ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 500 பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமலாக நடவடிக்கைகளை மனிதவள அமைச்சகம் மேற்கொண்டது.

தொழிலாளிகளின் நலனுக்காக அதிரடியாக மனிதவள அமைச்சகம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
💠 இரண்டு வேலை நிறுத்த உத்தரவுகளை பிறப்பித்தது.

💠 வழக்கு பதிவு செய்து $165,000 க்கும் அதிகமாக அபராதங்களையும் விதித்துள்ளது.