தெம்பனிஸ் பகுதியில் புதிய அப்டேட்..!!! என்ன தெரியுமா..??
சிங்கப்பூர்:தெம்பனிஸ் தெரு 91 பகுதியில், குடியிருப்பாளர்களின் பயண வசதியை மேம்படுத்துவதற்காக இரண்டு தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இது வரும் அக்டோபர் 26.10.2025 அன்று திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கத் ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் சூ பெய் கிங் தெரிவித்ததன்படி, நிரந்தர பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் வரை, தற்காலிக நிறுத்தங்கள் குடியிருப்பாளர்களுக்கு வசதியை வழங்கும்.
சூ பெய் கிங் இன்று (21.10.25) இன்ஸ்டாகிராமில் தற்காலிக நிறுத்தத்தில் படமாக்கிய காணொளியை பகிர்ந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார்.மேலும் ஷாங்க்யு பகுதியில் உள்ள தெம்பனிஸ் கிரீன்எமரால்டு மற்றும் கிரீன்ஓபால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் பயணத்தை எளிதாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த பகுதியின் பிடோக் பேருந்து சந்திப்பு மற்றும் ஆர்ச்சர்ட் சாலை வரை செல்லும் 10 பேருந்து வழித்தடங்கள் (5, 18, 21, 28, 46, 59, 65, 67, 69, 168) தற்காலிக நிறுத்தங்களைக் கடந்து செல்லும், இதனால் போக்குவரத்து மிகவும் வசதியாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சூ பெய் கிங் கூறியதாவது, “நிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்பு மற்றும் குடியிருப்பாளர்களின் தேவைகளுக்கு விரைவான பதிலுக்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.