சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!!

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகர்களுக்காக புதிய இணையதளம்..!! ‘தேக்காடாட்எஸ்ஜி’ அறிமுகம்..!!

சிங்கப்பூரில் இந்திய வர்த்தகங்களின் மின்னிலக்கத் தடத்தை மேம்படுத்தும் வகையில் புதிய இணையதளம் ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அந்தப் புதிய இணையதளத்திற்கு தேக்காடாட்எஸ்ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற மின்னிலக்க வெளியீட்டைத் தொடர்ந்து,
நேற்று பிஜிபி மண்டபத்தில் நடைபெற்ற “சங்கமம் @ தேக்கா 2026″என்ற நிகழ்ச்சியில் இந்த இணையதளம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கமம் @ தேக்கா என்பது, வர்த்தகங்கள், பல்வேறு கலாச்சாரப் படைப்புகள், சமூக பங்காளிகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் இணைக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சியாகும்.

500க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட சந்தை, சமூகம், மரபுடைமை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை இணைக்கும் களமாகவும் இந்த சங்கமம் திகழ்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரேஷ் சிங்கராஜூ, தொடக்க விழாவில் கலந்துகொண்டு லிட்டில் இந்தியாவின் வரலாற்று சிறப்புகளை கூறியுள்ளார்.

மேலும், “தேக்கா என்பது வெறும் சந்தை அல்ல. அது சிங்கப்பூர் இந்தியர்களின் ஓர் உணர்வு,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் உணர்வுகளோடு கலந்து இருக்கும் இந்த அடையாளத்தை, இந்த புதிய இணையதளம் மாற்றி வைக்கவில்லை எனவும் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது எனவும்  இணையதளம் குறித்து அவர் கூறியுள்ளார்.

இந்த ‘மின்னிலக்க இருட்டடிப்பு’ (digital invisibility) நிலையை மாற்றுவதே இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணையதளத்தின் நிறுவனரான குமாரவேலு பழனிவேல் கூறியதாவது: இதுவரை 100க்கும் மேற்பட்ட வர்த்தகங்கள் இத்தளத்தில் இணைந்துள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளிக்குள் 500 வர்த்தகங்களை இணைக்கும் நோக்கில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்திற்கும் (லிஷா) ‘தேக்காடாட்எஸ்ஜி’ தளத்திற்கும் இடையே ஒரு முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த இணையதளத்தில் இணைய விரும்பும் வர்த்தகர்கள், www.tekka.sg என்ற இணைய பக்கம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK