சிங்க்ஹோல் சம்பவம்...!!பாதுகாப்பு நிலையை கணிக்க அதிகாரிகள் வருகை..!!
சிங்கப்பூர்:தஞ்சோங் கட்டோங் பகுதியில் ஏற்பட்ட சிங்க்ஹோல் சம்பவத்தால் அருகிலுள்ள ‘ஒன் ஆம்பர்’ அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், அதன் மேலாண்மை நிறுவனம் ஒரு சுயாதீன பொறியாளரை நியமித்து பாதுகாப்பு மதிப்பீடு செய்ய முடிவெடுத்துள்ளது.
சப்சிடென்ஸ் சாலைக்கு அருகில் உள்ள பொதுப்பகுதிகளை மதிப்பீடு செய்ய கட்டமைப்பு மற்றும் சிவில் பொறியாளர்களிடமிருந்து தொழில்முறை கருத்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தரும் தகவல்களின் அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு விரைவில் அறிவிப்பு வழங்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவால் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்ட நிலையில், அருகிலுள்ள வணிகங்கள்,இந்திய உணவகங்கள் போன்றவை வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.
தர்பார் பகுதியில் உள்ள இந்திய உணவக மேலாளர் சுனில், போக்குவரத்து சிக்கலால் வாடிக்கையாளர்கள் முன்பதிவுகளை ரத்து செய்ததாகவும், $200 முதல் $300 வரை இழப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
“இது பெரிய இழப்பாக இல்லையென்றாலும், மக்கள் இந்த சம்பவத்தால் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.