காவல்துறையின் சீருடை அணிந்து கொண்டு காவல்துறை அதிகாரிகள் போலவே தங்களைக் காட்டிக்கொண்டு Google Meet வழியாக காணொளி அழைப்புகளை மோசடி செய்பவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
சில நேரங்களில் தங்களது சுயவிவரப்படமாக சிங்கப்பூர் காவல்துறையின் சின்னத்தை அவர்கள் பயன்படுத்துவார்கள். Google Meet அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சில மின்னஞ்சல் முகவரிகளில் (Email ID) சிங்கப்பூர் அல்லது காவல்துறை என்ற சொற்கள் ஆங்கிலத்தில் இடம் பெற்றிருக்கும்.
வங்கி கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நிகழ்ந்து, பணம் மாயமான பின்னர்தான், பொதுமக்கள் தங்களுக்கு மோசடி நடந்து விட்டது என்பதை உணர்கின்றனர்.
எனவே முன்பின் அறியாத நபர்களிடமிருந்து வரும் இதுபோன்ற தங்களுக்கு தொடர்பில்லாத காணொளி அழைப்புகளைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், எச்சரிக்கையுடன் இருக்கு மாறும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.