சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி : 20 பேரை கைது செய்த காவல்துறை..!!

சிங்கப்பூர் : ஆன்லைன் மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 15 ஆண்களும், 5 பெண்களும் அடங்குவர்.

அரசு அதிகாரிகள் போல் ஆள் மாறாட்டம் செய்தல், வேலை விண்ணப்பங்கள், முதலீட்டு தொடர்பான மோசடிகள் மற்றும் இணையவழி வர்த்தக மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதாக இவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

மோசடி செய்யப்பட்ட தொகையானது 1.30 மில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டவர்கள் 19 வயதிற்கும் 49 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

மோசடி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், இந்த 20 நபர்களும் தங்களது வங்கி கணக்குகளை தொடங்கிவிட்டு அதை அடையாளம் தெரியாதவர்களிடம் ஒப்படைத்ததாகவும் அல்லது பெற்றதாகவும், மோசடி கும்பல்களின் பணத்தை சட்டவிரோதமாக புழக்கத்தில் விடுவதற்கு வழிவகுத்ததாகவும் காவல்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிலர் அடையாளம் தெரியாத நபர்களிடம் இணையவழி வங்கி உள்நுழைவு தகவல்களையும் வாங்கியுள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

ஊழல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கடுமையான குற்றங்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் வழங்க வாய்ப்புள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் குற்றவாளிகளின் தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளது. மோசடி செய்பவர்கள், குற்றக் கும்பல்களின் உறுப்பினர்கள் அல்லது ஆள் சேர்ப்பவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு விட்டால், அவர்களுக்கு 6 முதல் 24 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம். மோசடி செய்பவர்களுக்கு பண மோசடியில் உதவுபவர்களுக்கு 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.

நாளை (ஏப்ரல் 13) முதல் 17 ஆம் தேதி வரை கைது செய்யப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK